About YESHIVA BIBLE

Yeshiva Bible ஸ்தாபனத்தின் நிறுவனர்  வின்யார்ட்.ஜே,ஸ்டாலின் அவர்கள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். கல்வித்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். கடந்த பணிரெண்டு ஆண்டுகளாக விவிலிய மூல மொழிகளை மேம்பட்ட இறையியல் கல்வியோடு கற்றுகொடுத்துகொண்டு வருகிறார்.   இவரது “பார்-படி”, “எழுது-படி”  “SEE-READ”  “WRITE-READ” என்கிற உளவியல் மற்றும் அறிவியல் பூர்வமான ஆடியோ-விஷுவல் தமிழ்வழி பாடத்திட்டம் மிகவும்  சிறப்பானது. இவருடைய இந்த விவிலிய மொழி பயிற்சி பட்டறையிலும் தமிழ் வேதாகம இறையியல் பாட சாலையிலும்  உலகிலுள்ள பதினான்கு நாடுகளில் வாழுகிற  தமிழை தாய்மொழியாகக்கொண்ட  இறையியலில் ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகிறார்கள்.

Our Faith Creed

I believe in God the Father Almighty who created heavens and earth through His only begotten Son.

    I believe in our Lord and Saviour Jesus Christ His only begotten Son who was conceived by the Holy Spirit, born of virgin Mary according to the prophetical scriptures in the Holy Bible, suffered under Pontius Pilate for my sins, was crucified, dead and buried. He descended into hell, the third day he rose again from the dead. He ascended to the Heaven and sitteth on the right hand of God the Father Almighty, From thence He shall take His Bride to himself, which He has purchased with His own Blood, He shall come to judge the quick and the dead.

I believe in the Holy Spirit which He has given me His spirit and transformed me as the Temple of the Living God. He reproves me and guiding me into all truth.

He created me in His own image therefore I got body, Soul and Spirit. The Almighty God who creates me is the Father, the Son and the Holy Spirit. He is Triune God.

I am a member of the Church of Christ Jesus which is universal. I believe in the communion of saints, the forgiveness of sins, the resurrection of the body and life everlasting. Amen.

எங்கள் விசுவாச பிரமாணம்

வானத்தையும் பூமியையும் தனது ஒரே பேறான குமாரனை கொண்டு படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.

அவருடைய ஒரேபேபறான குமாரனான நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன வசனங்களின்படி அவர் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் என்னுடைய பாவங்களுக்காக பாடுபட்டு கோர சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு பாதாளத்துக்கு இறங்கினார். மூன்றாம் நாளில் மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். உன்னதத்துக்கேறி பரலோகத்தில் சர்வ வல்லமையுள்ள பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால் சம்பாதித்த தம்முடைய மணவாட்டியான திருச்சபையை தன்னிடத்தில் எடுத்துக்கொள்ளவும் பின்பு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருகிறார்.

பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். அவர் தமது ஆவியை எனக்குத் தந்து என்னை ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக மாற்றுகிறார். அவர் கண்டித்து உணர்த்தி சகல சத்தியத்திற்கும் என்னை நடத்தி வருகிறார்.

நான் தேவசாயலாக படைக்கப்பட்டு இருக்கிறேன். ஆதலால் நான் ஆவி ஆத்துமா சரீரத்தை உடையவனாக இருக்கிறேன் என்னை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். அவர் திரியேக தேவன். நான் உலகலாவிய கிறிஸ்து இயேசுவின் திருச்சபையில் ஒரு அங்கமாய் இருக்கிறேன்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விரும்புகிறேன். பாவ மன்னிப்பும் சரீரம் உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

எங்கள் விசுவாசம் (Our Faith):

பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. | தீமோத்தேயு 3:16
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை, கன்னிகைப் பிறப்பு, அவரது மீட்பின் செயல், பரிகார மரணம், சரீர உயிர்த்தெழுதல், பரமேறுதல். ஏசாயா 7:14 ; | ஏசாயா 9:6 ; | ரோமர் 8:34; | அப்போஸ்தலர் 1:9
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மாத்திரம் இரட்சிப்பு உண்டு. | யோவான் 5:10, ரோமர் 10:13-15
கர்த்தருடைய பந்தியை அனுசரிக்க வேண்டும். | கொரிந்தியர் 11:23-26
அந்நிய பாஷை என்பது பரிசுத்தாவியின் ஞானஸ்தானத்திற்கான ஆரம்ப வெளிப்படையான சரீரப்பிரகாரமான அடையாளம். | அப்போஸ்தலர் 2:4,8,11,16 | அப்போஸ்தலர் 19:6
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. | அப்போஸ்தலர் 1:11 | லூக்கா 14:14 | வெளி 19:7-9
ஆயிரவருட அரசாட்சி. II தெசலோனிக்கேயர் 1:7-8, வெளி 19:11-14, வெளி 20 :6,7. 15. இறுதி நியாயத்தீர்ப்பு. வெளி 19:20, வெளி 20:10- 15. 16. புதிய வானம், புதிய பூமி. | 2 பேதுரு 3:13 | வெளி 21:1
பிதா, குமாரன், பரிசுத்தாவியானவராகிய நித்திய திரியேக தேவன் உண்டு. | உபாகமம் 6.4
மனிதனின் வீழ்ச்சி. | ஆதியாகமம் 2:17 3:1-3, 6:17.
தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறவேண்டும். | மத்தேயு 28:19 | அப்போஸ்தலர் 8:38,39 | கொலோசெயர் 2:12 | ரோமர் 6:4
இயேசு கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய மீட்பின் செயலால் தெய்வீக சுகம் உண்டு. | ஏசாயா 53:4 | மத்தேயு 8:16-17 | யாக்கோபு 5:13-14
விசுவாசிகள் பரிசுத்தமாக வாழ பரிசுத்தாவியானவரின் பரிசுத்தமாக்கும் வல்லமை அவசியம். | எபிரெயர் 12:14 | 1 பேதுரு 1:15-16
ஊழியம். | ரோமர் 12:7 | எபேசியர் 4:12-13
சபையும் அதன் அருட்பணியும். | அப்போஸ்தலர் 2:47 | ரோமர் 16:5 | 1 கொரிந்தியர் 1:2 | எபிரெயர் 12:22-24 | 1 தெசலோனிக்கேயர் 1:1 | எபேசியர் 1:21, 3:21

Contact

Email Us

info@yeshivabible.com

Office

Fingerpost P.O Ooty, The Nilgiris, Tamilnadu, India - 643006
Whatsapp: +91 94896 14170

#contact